இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ்ஸர்கள் விளாசிய உலக சாதனைக்குச் சொந்தக்காரருமான யுவராஜ் சிங் இப்போது (37) வயதை நெருங்கும் நிலையில் சர்வசே கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
16 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவரும் யுவராஜ் சிங் 40 டெஸ்ட், 304 ஒருநாள் மற்றும் 58 ரி-20 போட்டிகளிலும் ஆடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்து சர்வதேச போட்டிகளில் ஆடிவந்தார். 2017ம் ஆண்டிற்கு பின்னர் அணியில் இருந்து விலக்கப்பட்டிருந்தார்.
இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண அணியில் இடம்கிடைக்காத நிலையில் இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார்

Comments
Post a Comment