Skip to main content

Posts

Showing posts from June, 2019

இந்தியாவிடம் சரணடைந்த மே.இ.தீவுகள்: தோல்வியே பெறாத ஒரே அணியாக இந்தியா!!!

இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று மான்செஸ்டர் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 34வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது விராத் கோஹ்லி, தோனி, பாண்ட்யா அதிரடியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 268 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 269 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மே.இ.தீவுகள் அணி,  34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து  143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு தோல்வி கூட இல்லாமல் வெற்றி நடைபோடும் ஒரே அணியாக இந்தியா உள்ளது. இன்றைய வெற்றியால் இந்திய அணி 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்திய அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் இருப்பதால் இன்னும் ஒரு போட்டியில் வென்றாலே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவை எங்களால் வெல்ல முடியும் – ஷகிப் உல் ஹசன் சவால் !

பங்களாதேஷ் அணியின் ஷகீப் உல் ஹசன் இந்தியாவைத் தங்கள் அணியால் வெல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. வலிமை மிக்க தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வென்று அவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்நிலையில் அந்த அணிக்கு அடுத்து வரும் இரண்டு போட்டிகள் மிக முக்கியமானவை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறி செல்ல முடியும். ஆப்கானிஸ்தான் அணியோடு நடந்த போட்டியில் வெற்றி பெற்ற பின் அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் உல் ஹசன் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘இந்தியா இதுவரை எந்தப் போட்டிகளிலும் தோல்வி அடையாமல் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இந்தியாவை எங்களால் எளிதாக வெல்ல முடியாது என எனக்குத் தெரியும். ஆனால் நாங்கள் எங்கள் சிறப்பான பங்களிப்பை அளிப்போம். இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த சில வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றுவோம்’ எனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு 3வது தோல்வி: அரையிறுதிக்கு செல்லுமா?

கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணி இந்த தொடரில் மூன்றாவது தோல்வியை இன்று அடைந்துள்ளதால் இந்த அணி அரையிறுதிக்கு செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது இங்கிலாந்து அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகளை மட்டுமே வென்றுள்ளது. ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் மோதி தோல்வி அடைந்துள்ளது. இன்னும் இந்தியா, நியூசிலாந்து ஆகிய பலமான அணியுடன் மோதவேண்டிய நிலை உள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது அதே நேரத்தில் ஆறு வெற்றிகளை பெற்று 12 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது   போட்டியின் ஸ்கோர் விபரம் ஆஸ்திரேலியா: 285/7  50 ஓவரக்ள் பின்ச்: 100 வார்னர்: 53 ஸ்மித்: 38 கார்ரே: 38 இங்கிலாந்து: 221/10  44.4 ஓவர்கள் ஸ்டோக்ஸ்: 89 பெயர்ஸ்டோ: 27 வோக்ஸ்: 26 ரஷித்: 25 ஆட்டநாயகன்: பின்ச்

கோஹ்லி, பூம்ராவுக்கு ஓய்வு – பிசிசிஐ அறிவிப்பு !!!

உலகக்கோப்பைப் போட்டிகளுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியோடு இந்தியா விளையாட இருக்கும் தொடரில் கோலி மற்றும் பூம்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய அணி இப்போது இங்கிலாந்தில் முகாமிட்டு உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி இதுவரை  ஒருத் தோல்வியைக் கூட சந்திக்கவில்லை என்பது நம்பிக்கையளிக்க கூடியதாக உள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் உலகக்கோப்பை முடிந்தவுடன்  இந்திய அணி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்று வெஸ்ட் இண்டீஸோடு நடக்கும் ஒரு நாள் தொடரில் கோஹ்லி மற்றும் பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பிறகு நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருவரும் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7வது தோல்வி: ஒரு வெற்றியை கூட ருசிக்காமல் வெளியேறுமா ஆப்கானிஸ்தான்?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி நேற்றைய வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த அணி பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மட்டுமே லீக் போட்டியில் இன்னும் விளையாட வேண்டிய நிலை இருப்பதால் இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு வெற்றியை கூட ருசிக்காமல் நாடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது நேற்றைய போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி மொத்தம் 7 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. இன்னும் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்த அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது நேற்றைய போட்டியின் ஸ்கோர் விபரங்கள் வங்கதேச அணி: 262/7  50 ஓவர்கள் ரஹிம்: 83 ஷாகிப் அல் ஹசன்: 51 தமிம் இக்பால்: 36 ஹோசைன்: 35 ஆப்கானிஸ்தான்: 200/10  47 ஓவர்கள் ஷின்வாரி: 49 குல்பதின் நயிப்: 47 ரஹ்மத் ஷா: 24 நஜ்புல்லா: 23 ஆட்டநாயகன்: ஷாகிப் அல் ஹசன்: இன்றைய போட்டி: இங்கி...

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (25-06-2019)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள். மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம்: இன்று குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 மிதுனம்: இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். நண்பர்கள் - உறவினர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9    கடகம்: இ...

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து அதிரடி பேட்ஸ்மேன் விலகல்!!!!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஒருசில அணிகளின் நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக விலகி வரும் துரதிஷ்டமான நிலை தொடர்ந்து வருகிறது. இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் தவான், முன்னணி பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் கலக்கியவரும் மேற்கிந்திய தீவுகளின் முன்னணி பேட்ஸ்மேனுமாகிய ஆண்ட்ரே ரசல் திடீரென உலகக்கோப்பையில் இருந்து விலகியுள்ளார். உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக ஆண்ட்ரே ரசல் விலகியுள்ளதாகவும் இனிவரும் எஞ்சியுள்ள போட்டிகளில் ரசல் பங்கேற்கமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக  சுனில் அம்ப்ரிஸ் மேற்கிந்திய தீவுகள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மழை காரணமாக கிடைத்த ஒரு புள்ளியையும் சேர்த்து அந்த அணி இதுவரை 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில...

காணவில்லை!!! அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்!!!

பெயர்: ச.சுரேஷ்நாதன் S.SURESHNATHAN  தம்பிலுவில் என்பவரின் சாரதி அனுமதி பத்திரம் LICENCES   காணவில்லை .. கிடைத்தவர்கள் 775616392 எனும் தொலைபேசி இலக்கஇயக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்....

ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது ஸ்கோர் விபரம்: இந்தியா: 224/8  50 ஓவரகள் விராத் கோஹ்லி: 67 கேதார் ஜாதவ்: 52 கே.எல்.ராகுல்: 30 விஜய் சங்கர்: 29 தோனி: 28 ஆப்கானிஸ்தான்: 213/10  49.5 ஓவர்கள் முகமது நபி: 52 ரஹ்மத் ஷா: 36 குல்பதின் நப்: 27 ஜாட்ரான்: 21 ஆட்டநாயகன்: பும்ரா இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 291/8  50 ஓவர்கள்

ஆப்பு வைக்குமா ஆப்கானிஸ்தான்? - 225 ரன்கள் இலக்கு!!

இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில் பேட்டிங் செய்த இந்தியா 224 ரன்களை மட்டுமே பெற்றுள்ளது. 225 ரன்களை இலக்காக வைத்து களத்தில் இறங்குகிறது ஆப்கானிஸ்தான். நடந்து வரும் உலக கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடிக்கொண்டிருக்கின்றன. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து விளையாட தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தொடக்க பேட்ஸ்மேனும், இந்திய அணியின் நட்சத்திர வீரருமான ரோஹித் ஷர்மா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து விளையாடிய கேப்டன் கொஹ்லி அரை சதம் எடுத்து கொஞ்சம் ஆறுதல் அளித்தார். அடுத்து விளையாடிய விஜய் ஷங்கர், தோனியால் கூட ஆப்கானிஸ்தானின் சுழல் பந்துகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. கேதர் ஜாதவ் ஓரளவு சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். ஆனாலும் இன்று இவ்வளவு மோசமான ஆட்டத்தை இந்தியாவிடமிருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. 50 ஓவர்கள் விளையாடிய இந்தியா ஒரே ஒரு முறை மட்டுமே சிக்சர் அடித்துள்ளது. அதுவும் கேதர் ஜாதவ் அடித்த சிக்ஸர். தற்போது 225 ரன்களை இலக...

கோஹ்லிக்கு அடுத்து ராகுல்தான் – புகழ்ந்துத் தள்ளிய லாரா !

இந்திய அணியில் தற்போதைய நிலையில் கோஹ்லிக்கு அடுத்து சிறந்த பேட்ஸ்மேனாக ராகுல்தான் விளங்குகிறார் என மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைத் தொடரில் இருந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக ராகுல் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். இதையடுத்து மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா ராகுல் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அவர் ‘தற்போதைய நிலையில் விராட் கோலியைத் தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது தலைசிறந்த பேட்ஸ்மேன் ராகுல்தான். ஏனென்றால் அவர் 4 ஆவது வீரராகவும் சிறப்பாக விளையாடுகிறார். மேலும் ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடினார். ராகுலிடம் நல்ல பேட்டிங் டெக்னிக் உள்ளது. ஸ்விங் பந்துகளை அவர் எளிதாக எதிர்கொள்கிறார். இந்தத் தொடர் முடியும் போது அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் அவரையும் நான் எதிர்பார்க்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

மலிங்காவின் விக்கெட் அரைசதம் – சாதனையாளர்கள் பட்டியலில் நான்காவது இடம் !

நேற்றையப் போட்டியில் இங்கிலாந்து அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்று அசத்தியுள்ளது. 232 ரன்கள் எனும் சராசரிக்குக் கீழான இலக்கை வைத்துக்கொண்டு பலம் பொருந்திய இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 12 ஆண்டுகால சாதனையைத் தக்கவைத்துள்ளது இலங்கை அணி. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர்களில் லசித் மலிங்காவும் ஒருவர். 10 ஓவர்கள் வீசிய அவர் 43 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து பேர்ஸ்டோ, வின்ஸ், ரூட் மற்றும் பட்லர் ஆகிய முக்கியப் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் உலகக்கோப்பைப் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் எடுத்த சாதனையாளர்கள் பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். மொத்தம் 26 போட்டிகள் விளையாடியுள்ள அவர் 51 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்தப்பட்டியலில் முதலிடத்தில் மெக்ராத்தும் (39 போட்டி, 71 விக்கெட்), இரண்டாவது இடத்தில் முரளிதரனும் (40 போட்டி 68 விக்கெட்) மூன்றாவது இடத்தில் வாசிம் அக்ரம் (38 போட்டிகள் 55 விக்கெட்) ஆகியோரும் உள்ளனர்.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி! 2019/06/22

மேஷம்  இன்று எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ராசி பலன்கள் ரிஷபம்  இன்று கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 மிதுனம்  இன்று சோம்பல் அதிகமாகலாம். தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 கடகம் இன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1...

இலங்கையிடம் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி: மலிங்கா அபார பந்துவீச்சு!!

இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணி 233 என்ற எளிய இலக்கை கொடுத்திருந்த நிலையில் அந்த இலக்கை எட்ட முடியாமல் இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இலங்கை அணியின் மலிங்கா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய 27வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 232 ரன்கள் எடுத்தது. மாத்யூஸ் 85 ரன்களும், ஃபெரண்டோ 49 ரன்களும், மெண்டிஸ் 46 ரன்களும், டிசில்வா 29 ரன்களும் எடுத்தனர் 233 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரூட் 57 ரன்களும், ஸ்கோக்ஸ் 82 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியால் இலங்கை அணி 6 புள்ளிகளுடன் 5வது இடத்தை பிடித்துள்ளது.

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் –( 232/9 50 ov) !

உலகக்கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இலங்கை அணி இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. இதுவரி 5 போட்டிகளில் விளையாடி ஒருப் போட்டியில் வெற்றியும் 2 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. 2 போட்டிகள் மழைக்காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.  ஆனால் இங்கிலாந்து அணியோ ஐந்தில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகக்கோப்பை தொடரின் 27 ஆவது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 50 ஓவர் முடிவில் 232 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்துள்ளது . இந்த போட்டியில் தோற்கும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும். Score card Sri Lanka Batsman R(B) 4s 6s SR Karunaratne(c) 1 (8) 0 0 12.50 c Jos Buttler b Jofra Archer Kusal Perera(wk) 2 (6) 0 0 33.33 c Moeen b Chris Woakes Avishka Fernando 49 (39) 6 2 125.64 c Adi...

டி20-ல் களமிறங்கும் யுவராஜ் சிங்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், குளோபல் டி20 தொடரின் 2வது சீசனில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.  சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மும்பையில் தனது ஓய்வை கண்ணீருடன் அறிவித்த யுவராஜ், ஆழமாக சிந்தித்த பின்னரே ஓய்வு முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.  இதனைத்தொடர்ந்து, யுவராஜ் சிங் பிசிசிஐ-க்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், டி20 தொடர்களில் விளையாட அனுமதி வழங்குமாறு கேட்டிருந்தார். ஆனால், பிசிசிஐ இதற்கு எந்த பதிலும் அளிக்காத நிலையில் குளோபல் டி20 தொடரின் 2வது சீசனில் விளையாட யுவராஜ் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். ஆம், கனடாவில் நடக்கும் குளோபல் டி20 தொடரில் டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்காக யுவராஜ் விளையாட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 6 அணிகள் இந்த தொடரின் ஒவ்வொரு அணியிலும் 4 கனடா வீரர்களும் இடம் பெறுவார்கள். இந்த 2வது சீசன் அடுத்த மாதம் 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

382 எனும் இமாலய இலக்கை நெருங்கிய வங்கதேசம்: 48 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி!

நேற்றைய உலக்ககோப்பை கிரிக்கெட் போட்டியின் 26வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி கொடுத்த 382 என்ற இமாலய இலக்கை கிட்டத்தட்ட வங்கதேசம் நெருங்கிவிட்டது. அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 333 ரன்கள் எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வி அடைந்தது. இதனால் வங்கதேச அணிக்கு ரன்ரேட்டில் அதிக இழப்பில்லை என்பதால் தொடர்ந்து 5வது இடத்தில் உள்ளது. நேற்றைய வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது ஸ்கோர் விபரம்: இங்கிலாந்து: 381/5  50 ஓவர்கள் வார்னர்: 166 பின்ச்: 53 காவாஜா: 89 மேக்ஸ்வெல்: 32 வங்கதேசம்: 333/8 ரஹிம்: 102 மஹ்முதுல்லா: 69 தமிம் இக்பால்: 62 ஷாகிப் அல் ஹசன்: 41 ஆட்டநாயகன்: வார்னர் இன்றைய போட்டி: இங்கிலாந்து மற்றும் இலங்கை

இன்றைய ராசிபலன் (21-06-2019)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள். மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9 ரிஷபம்: இன்று கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 மிதுனம்: இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து  தாமதப்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7 கடகம்: இன்று முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் ...

பாதயாத்திரீகர் குழுவினரை பாதநமஸ்காரம் செய்து வழியனுப்பிவைப்பு!

வேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரைக்குழுவினர் விசேடபூஜை சிறப்பநூல் வெளியீடு மற்றும்  பாதநமஸ்காரம் செயிவிக்கப்பட்டு வழியனுப்பிவைக்கப்பட்டனர். வழியனுப்பிவைக்கும் இவ்வைபவம்  (20)  காலை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தில் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் ஆசியுடன் நடைபெற்றது. 72யாத்தீகர்களுடன் நேற்றுமுன்தினம் காலை 9மணியளவில்  பாதயாத்திரையை ஆரம்பித்தது. அதிதிகளாக திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன்  காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர். ஆலயபரிபாலன சபைத்தலைவர் சு.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பழுகாமத்தைச்சேர்ந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தர் செல்லையா நற்குணம் எழுதிய முதல் நூலான 'கதிர்காமப் பாதயாத்திரையின் சிறப்பும் கந்தப்பெருமாளின் அருளும் ' என்ற தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. நூல் வெளியீட்டுரையை பாதயாத்திரைச்சங்க ஆலோசகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார். தொடர்ந்து ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் வழியனுப்ப...