எண்ணெய் குளியல், சரும பாதுகாப்புக்கு சிறந்த சிகிச்சை. தோலுக்கும் பதமானது. எண்ணெய் குளியலுக்கு ஏற்ற எண்ணெய், நல்லெண்ணெய் தான். அடுத்தது விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய்
தாங்கும் அளவு சூடாக்கி, முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும், மெதுவாக தேய்க்க வேண்டும். நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும், இரண்டு சொட்டு எண்ணெய் விட வேண்டும்.
சூரிய வெளிச்சத்தில் 5am-7am , 15-20 நிமிடம் உடல் காய நிற்க வேண்டும். பின் வெந்நீரில் சீகக்காய் போட்டு, எண்ணெய் போக குளிக்க வேண்டும். சுடுதண்ணீரை உடம்பில் ஊற்றும் போது, அது கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமாக, வெளியேறத் தொடங்கும்.
எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்த்தால் சரியாகும். நமது சருமத்திலும் கூந்தலிலும் இயற்கையான அமிலத்தன்மை இருக்கிறது. சோப்போ, ஷாம்புவோ தேய்த்துக் குளித்தால், அவற்றிலுள்ள காரத்தன்மை, சருமத்தையும் கூந்தலையும் பாதிக்கும்.
முடி கொட்டுபவர்கள் தலையை அரக்கித் தேய்த்தால், முடி உதிர்தலை அது மேலும் அதிகரிக்கச் செய்யும். அவர்கள் எண்ணெயை பஞ்சில் முக்கி உச்சந்தலையில் வைத்தால், எண்ணெயின் வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு போதும்.
எண்ணெய் குளியல் நாளன்று தவிர்க்க வேண்டியவை:
எண்ணெய் குளியல் நாளன்று உடல் இயக்கத்திற்கு நல்ல ஓய்வு அவசியம். உடல் சூடு தணிந்திருக்கும் வேளையில், தயிர், பால், மோர், நீர்க் காய்கறிகள், திராட்சை, வாழைப்பழங்கள், குளிர்ந்த பானங்கள் முதலிய குளிர்ச்சி உண்டாக்கும் உணவுகள் தவிர்த்து, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய அரிசி உணவுகளே அன்றைய தினத்திற்கு ஏற்றது. மேலும் மாமிசம், மது, புகை, பகல் உறக்கம், உடற்புணர்வும் விலக்கப்பட வேண்டியவை.பகல் தூக்கம், அசைவ உணவு, வெயிலில் அலைதல், குளிர்பானங்கள் அருந்துதல் போன்ற சூட்டை அதிகரிக்கும் செயல்களைத் தவிர்ப்பது முக்கியம்.
ரோஜா இதழ்களை உதிர்த்து வெது வெதுப்பான தண்ணீர் நிறைந்த டப் அல்லது வாளியில் சிறிது நேரம் போட்டு வைத்து ரோஜாவின் இனிய மணம் நாசியில் கமழ குளியலை நிறைவு செய்யலாம்.
மூலிகை குளியல்
நல்லெண்ணெயோடு பூண்டு, சிகப்பு மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, சீரகம் உடையும் பதத்தில் இறக்கி தாங்கும் சூட்டில் பயன்படுத்த வேண்டியது. இது எல்லா வயதினருக்கும் ஏற்றது. இதனை மொத்தமாய் காய்ச்சி வைத்தும் பயன்படுத்தலாம்.
‘கபம்’ சார்ந்த தொல்லை இருப்பின் இதை உடல் முழுதும் தேய்த்து, தலையில் மிகக் குறைந்த அளவில் இட்டுக்கொள்ளலாம். (மாறாக கபத்தன்மை உடையோர்க்கென பிரத்யேகமான மூலிகை தைலங்களை (பீனிச தைலம்) தாராளமாய் பயன்படுத்தலாம். இவை சைனஸ் தொந்தரவு குறைவதற்கு உதவிகரமாகக்கூட செயல்படுகின்றன.
பஞ்சகற்பப் பொடியை (கஸ்தூரி மஞ்சள், மிளகு, கடுக்காய்த் தோல், நெல்லி வித்து, வேப்பம் வித்து என அனைத்து பொருட்களையும் சமஅளவில் சேர்த்து அரைத்தது) பயன்படுத்துவதை தமிழ் மருத்துவம் ஊக்குவிக்கிறது.
யூகலிப்டஸ், துளசி, பெருஞ்சீரகம், சீமைச்சாமந்தி போன்றவற்றை நீரில் போட்டு குளிப்பது, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி மருந்தாகவும், உடல் வலுவினை நன்கு அதிகரிக்கவும், பொலிவை பெறவும், சரும நோய்களில் இருந்து தீர்வு காணவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் உதவுகிறது.
வேப்பிலை இயற்கையிலேயே நல்ல கிருமி நாசினியாகும். குளியல் நீரில் வேப்பிலையை போட்டு குளித்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். உடலில் உள்ள அனைத்து நச்சுக் கிருமிகளை அழிக்கவும் இது பயனளிக்கும். உடல் துர்நாற்றத்தை போக்கவும், தோல் வியாதிகளை குணப்படுத்தவும் இது நல்ல மருந்தாகும்.
வேப்பிலை இயற்கையிலேயே நல்ல கிருமி நாசினியாகும். குளியல் நீரில் வேப்பிலையை போட்டு குளித்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். உடலில் உள்ள அனைத்து நச்சுக் கிருமிகளை அழிக்கவும் இது பயனளிக்கும். தோல் வியாதிகளை குணப்படுத்தவும் இது நல்ல மருந்தாகும். குறிப்பாக கடும் கோடையில் இந்தக் குளியல் பெரியவர்கள் முதல் சிறுவர் வரை நல்ல பலனளிக்கும். உடலைக் குளிர்விப்பதோடு சரும வியாதிகளையும் தூர நிறுத்தி துர்நாற்றத்தைப் போக்கும்.
குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிரை தேய்க்கலாம். பனை நுங்கு கிடைத்தால், அந்த நுங்கின் தோலை தனியாக சேகரித்து நன்றாக அரைத்து, அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பயறு மாவு சேர்த்து உடல் முழுவதும் தேய்த்து ஊறவிட்டு குளியுங்கள்.
சிறு சிறு சந்தன ஸ்டிக்குகள் அல்லது சந்தன தைலத்தை குளிக்கும் தண்ணீரில் கலந்து சிறிது நேரம் கழித்து குளிக்கலாம். மைசூர் சாண்டல் சோப்பை விட இந்த சந்தன மணம் நாள் முழுதும் நீடிக்கும்

Comments
Post a Comment