அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பினை நாளை வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு அனுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் ‘சுசந்த அருணா’ நிகழ்ச்சித் திட்டத்தில் வைத்து வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவும் பொதுஜன பெரமுன உறுப்பினருக்கு பிரதமர் பதவியும் கொடுக்கப்பட வேண்டும் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
கடந்த ஆட்சியில், இளைஞர் மையம் முடங்கியது என்றும் அது ‘நில் பாலகாய’ வுடன் மாற்றப்பட்டது. இதன் காரணமாக நாட்டின் இளைஞர்கள் என்ன செய்வது ஒரு குழப்பத்தில் இருந்தனர்.
இதனால் பாடசாலையை விட்டு வெளியேறியவர்கள் மூன்று சக்கர வாகனம் ஓட்டுனர்களாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கடுமையான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக கோட்டபாய ராஜபக்ஷ ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகின.
அந்தவகையில் அடுத்த தேர்தலில் வேட்பாளர்களை களமிறங்க தயார் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியுடன் அடுத்த தேர்தலில் கூட்டணி அமைத்துக்கொள்ளுவது குறித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில் நாளை வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment