Skip to main content

எந்த ராசிக்காரருக்கு எந்த நாள் அதிர்ஷ்டமானது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?


ஜாதகம், பரிகாரம், ராசிப்பலன் போன்றவற்றின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அதிகம் உள்ளனர். இருப்பினும், மனதின் ஒரு ஓரத்தில் இதன் மீது நம்பிக்கை இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அதை வெளிப்படையாக காண்பித்துக் கொள்வதில்லை.

எப்படி ராசியைக் கொண்டு, அந்த ராசிக்குரியவரின் குணத்தை சொல்ல முடிகிறதோ, அதேப் போல் எந்த ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை வழங்கும் என்பதையும் சொல்ல முடியும்.அந்த நாளில் அந்த ராசிக்காரர்கள் தங்களது முக்கிய பணிகளை மேற்கொண்டால், வெற்றிக் கிட்டும். அது தொழிலாகட்டும் அல்லது சொந்த வாழ்க்கையாகட்டும், அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சரி, இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்று பார்ப்போம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கும் நாள். இந்நாளில் எந்த ஒரு செயலை செய்தாலும் வெற்றிக்கிட்டும். நீங்கள் மற்றவர்களிடம் உங்களது திறமையை வெளிக்காட்ட நினைத்தால், இந்நாளில் மேற்கொள்ளுங்கள், இதனால் வெற்றி உங்களுக்கே.

ரிஷபம்: வெள்ளி, புதன், சனி மற்றும் திங்கள் போன்ற கிழமைகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும். செவ்வாய் கிழமைகளில் ஊதாரித்தனமான செலவுகளைச் செய்யக்கூடும். இந்த ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் நல்லது.

மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். மிதுன ராசிக்காரர்கள் எந்த ஒரு புதிய செயலையும் புதன் கிழமைகளில் மேற்கொண்டால் நல்லது நடக்கும். மொத்தத்தில் இந்த கிழமை உங்களுக்கு முன்னேற்றத்தை மட்டுமே தரும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகள் இன்பம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும். திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகள் வெற்றியை வாரி வழங்கும். புதன்கிழமை பயணங்கள் மற்றும் முதலீடுகளுக்கு உகந்தது. சனிக்கிழமை சாதகமில்லாத நாள். இந்த ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் விரதமிருப்பது நல்லது.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு ஞாயிற்று கிழமை சிறந்த நாள். இந்நாளில் உங்களது திறமையை முழுமையாக காணலாம். இந்நாளில் எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் வெற்றியை மட்டுமே பரிசாகப் பெறுவீர்கள்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு புதன், வெள்ளி, திங்கள் மற்றும் வியாழக் கிழமைகள் அதிர்ஷ்டத்தை வழங்கும் தினங்கள். ஞாயிறு, செவ்வாய், சனி போன்ற தினங்களில் எந்த ஒரு முக்கியமான மற்றும் புதிய விஷயத்தையும் மேற்கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால், தாங்க முடியாத அளவில் படுதோல்வியை சந்திக்கக்கூடும்.

துலாம்: இந்த ராசிக்கு வெள்ளிக்கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கும் நாள். இந்நாளில் உங்களது ராஜதந்திர மனோபாவம், நிறைய மக்களுடன் பழகவும், அதிக புகழையும் வாங்கித் தரும். மொத்தத்தில் இந்நாள் உங்களை உயரச் செய்யும்.

விருச்சிகம்: ஞாயிறு, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான தினம். இந்நாளில் எந்த காரியத்திலும் வெற்றி கிட்டும். புதன் மற்றும் சனிக்கிழமைகள் சாதகமற்றது. இந்நாளில் எந்த ஒரு முக்கிய விஷயங்களையும் மேற்கொள்ள வேண்டாம்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு வியாழக்கிழமை அதிர்ஷ்டமான தினம். இந்நாளில் உங்களது திறமை முழுமையாக புலப்படும். எனவே நீங்கள் நிறைவேற்ற வேண்டுமென்று நினைக்கும் காரியங்களை இந்நாளில் மேற்கொள்வது வெற்றியைத் தரும்.

மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமை உகந்தது. இந்நாளில் இவர்கள் செய்ய நினைக்கும் செயல்களை மேற்கொண்டால், அவர் இதுவரை நினைத்திராத பலன் கிடைக்கும். இந்நாளில் இவர்கள் மிகவும் சுறுசுறுப்புடன் மற்றும் புத்துணர்ச்சியுடன் செயல்படக்கூடும். இதனால் அனைத்திலும் வெற்றி கிட்டும்.

கும்பம் : கும்ப ராசிக்காரர்களுக்கு வியாழன், வெள்ளி, செவ்வாய் மற்றும் திங்கள் போன்ற தினங்கள் அதிர்ஷ்டமான நாட்கள். புதன் மற்றும் சனி அதிர்ஷ்டமற்ற நாட்கள். ஞாயிற்றுக்கிழமை கலவையானது.

மீனம்: மீன ராசிக்காரர்களே! உங்களுக்கு வியாழக்கிழமை மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் உங்களது புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது மற்றும் இந்நாளில் நீங்கள் எதிலும் வெற்றி காண்பீர்கள்.

Comments

Popular posts from this blog

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது. பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது. சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும் உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன். என் அழுகைக்கான காரணத்தை அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை... இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான் எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ எனக்கே தெரியாது. அழுகையின் தொடக்கமும் முடிவும் அழுகையாகவே மட்டும் இருக்கிறது. கிடைக்கும் தனிமைகளை எல்லாம் அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன். அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின் மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன். அழாத நாட்கள் என்று ஒன்றமே என்னை கடந்ததாக இல்லை... அழுகையை விட ஒரு நண்பன் இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை... அழுவதற்கென்று குளியல் அறையினையே நான் அதிகம் பயன்படுத்துகின்றேன். யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும் எனக்கு பயமில்லை... எனது அழுகையினை எனது குளியல் ஒருபோதும் காட்டியே க...

ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது ஸ்கோர் விபரம்: இந்தியா: 224/8  50 ஓவரகள் விராத் கோஹ்லி: 67 கேதார் ஜாதவ்: 52 கே.எல்.ராகுல்: 30 விஜய் சங்கர்: 29 தோனி: 28 ஆப்கானிஸ்தான்: 213/10  49.5 ஓவர்கள் முகமது நபி: 52 ரஹ்மத் ஷா: 36 குல்பதின் நப்: 27 ஜாட்ரான்: 21 ஆட்டநாயகன்: பும்ரா இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 291/8  50 ஓவர்கள்

ஏழ்மை கல்விக்கு தடையல்ல - வாழ்வினில் கல்வியினூடாக பல சாதனைகள் செய்திட வாழ்த்துக்கள் சகோதரி!!!

கடந்த வருடம் க.பொ.த சாதரன தர பரீட்சையில் 6 பாடங்களில் அதி உயர் சித்திகளை (6ஏ) பெற்ற #தாண்டியடி விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தமது குடும்ப சூழல் காரணமாக உயர் தர வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கல்வியில் திறமையும் ஆர்வமும் உடைய இம்மாணவிக்கு உதவும் முகமாக பொத்துவில் ஊறணியை சேரந்த சேவியர்_குரேரா பிறின்டன்_குரேரா அவர்கள் ரூ 25,000/- ஐ நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார் (இவர் ஏற்கனவே மர நடுகைக்காக ரூ 5,000/- நன்கொடை வழங்கியிருந்தார் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது)  வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏 இவருடைய நன்கொடையில் இந்துசமயம்,அரசியல்,தமிழ் ஆகிய பாடங்களுக்கான அடுத்து வரும் 2-3 மாதங்களுக்கான வகுப்பு கட்டணங்களும், நிரந்தர வாழ்வாதார உதவியாக ஒரு கோழிக்கூடு மற்றும் நாட்டுக்கோழிகளும் (10 பேடு, 2 சேவல்) வழங்கப்பட்டன.  இம்மாணவியின் கல்வி அடைவுமட்டங்களை பாடசாலை அதிபர் அவர்களால் நேரடி கண்கானிப்பில் அவதானிக்கபடும் என அதிபர் அவர்களே அக்கறை கொண்டு கூறியது கூடுதல் மகிழ்ச்சி. 👍🏻👌 நன்கொடையாளருக்கும் இதனை சரியாக...