Skip to main content

2019/06/10. இன்றைய ராசி பலன்கள்!!!


மேஷம்

மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். கனவு நனவாகும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: நண்பர்களின் ஆதரவுக் கிட்டும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.


கடகம்

கடகம்:  இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள் வார்கள். மகிழ்ச்சியான நாள்.


சிம்மம்

சிம்மம்:  ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.


கன்னி

கன்னி: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். திடீர் பயணங்கள் உண்டு.வியாபாரத்தில் போராடிலாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி யுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


துலாம்

துலாம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந் தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சபை களில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்:  புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையைமாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கைஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


தனுசு

தனுசு: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.


மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். போராட்டமான நாள்.


கும்பம்

கும்பம்: மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப் பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள்.பிள்ளைகள் நீண்டநாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கியஅறிவுரைகள் தருவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


மீனம்

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற் றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வெற்றி கிட்டும் நாள்.

Comments

Popular posts from this blog

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது. பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது. சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும் உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன். என் அழுகைக்கான காரணத்தை அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை... இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான் எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ எனக்கே தெரியாது. அழுகையின் தொடக்கமும் முடிவும் அழுகையாகவே மட்டும் இருக்கிறது. கிடைக்கும் தனிமைகளை எல்லாம் அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன். அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின் மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன். அழாத நாட்கள் என்று ஒன்றமே என்னை கடந்ததாக இல்லை... அழுகையை விட ஒரு நண்பன் இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை... அழுவதற்கென்று குளியல் அறையினையே நான் அதிகம் பயன்படுத்துகின்றேன். யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும் எனக்கு பயமில்லை... எனது அழுகையினை எனது குளியல் ஒருபோதும் காட்டியே க...

ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது ஸ்கோர் விபரம்: இந்தியா: 224/8  50 ஓவரகள் விராத் கோஹ்லி: 67 கேதார் ஜாதவ்: 52 கே.எல்.ராகுல்: 30 விஜய் சங்கர்: 29 தோனி: 28 ஆப்கானிஸ்தான்: 213/10  49.5 ஓவர்கள் முகமது நபி: 52 ரஹ்மத் ஷா: 36 குல்பதின் நப்: 27 ஜாட்ரான்: 21 ஆட்டநாயகன்: பும்ரா இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 291/8  50 ஓவர்கள்

ஏழ்மை கல்விக்கு தடையல்ல - வாழ்வினில் கல்வியினூடாக பல சாதனைகள் செய்திட வாழ்த்துக்கள் சகோதரி!!!

கடந்த வருடம் க.பொ.த சாதரன தர பரீட்சையில் 6 பாடங்களில் அதி உயர் சித்திகளை (6ஏ) பெற்ற #தாண்டியடி விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தமது குடும்ப சூழல் காரணமாக உயர் தர வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கல்வியில் திறமையும் ஆர்வமும் உடைய இம்மாணவிக்கு உதவும் முகமாக பொத்துவில் ஊறணியை சேரந்த சேவியர்_குரேரா பிறின்டன்_குரேரா அவர்கள் ரூ 25,000/- ஐ நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார் (இவர் ஏற்கனவே மர நடுகைக்காக ரூ 5,000/- நன்கொடை வழங்கியிருந்தார் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது)  வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏 இவருடைய நன்கொடையில் இந்துசமயம்,அரசியல்,தமிழ் ஆகிய பாடங்களுக்கான அடுத்து வரும் 2-3 மாதங்களுக்கான வகுப்பு கட்டணங்களும், நிரந்தர வாழ்வாதார உதவியாக ஒரு கோழிக்கூடு மற்றும் நாட்டுக்கோழிகளும் (10 பேடு, 2 சேவல்) வழங்கப்பட்டன.  இம்மாணவியின் கல்வி அடைவுமட்டங்களை பாடசாலை அதிபர் அவர்களால் நேரடி கண்கானிப்பில் அவதானிக்கபடும் என அதிபர் அவர்களே அக்கறை கொண்டு கூறியது கூடுதல் மகிழ்ச்சி. 👍🏻👌 நன்கொடையாளருக்கும் இதனை சரியாக...