Skip to main content

2019/06/09. இன்றைய ராசி பலன்கள்!!


மேஷம்

மேஷம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வியாபாரத் தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


மிதுனம்

மிதுனம்: உடன்பிறந்தவர் கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். வெற்றி பெறும் நாள்.


கடகம்

கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர் கள். உறவினர்களால் நன்மை உண்டு. வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். வாய்ப்புகள் கிட்டும் நாள்.


சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் சொன்ன சொல்லை காப் பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் சக ஊழியர்க ளால் அலைகழிக்கப்படுவீர்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.


கன்னி

கன்னி: சொந்த-பந்தங்களுடன் மனத்தாங்கல் வரும். உடல் நலம் பாதிக்கும். வாகனம் பழுதாகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத் திட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் உயரதிகாரி களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


துலாம்

துலாம்: பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய்வழியில் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உயர்வு பெறும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


தனுசு

தனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர் கள். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் இருப் பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது.


கும்பம்

கும்பம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


மீனம்

மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. மனதிற்கு இதமான செய்திகள் வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிக ளுக்கு நெருக்கமாவீர்கள்.

Comments

Popular posts from this blog

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது. பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது. சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும் உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன். என் அழுகைக்கான காரணத்தை அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை... இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான் எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ எனக்கே தெரியாது. அழுகையின் தொடக்கமும் முடிவும் அழுகையாகவே மட்டும் இருக்கிறது. கிடைக்கும் தனிமைகளை எல்லாம் அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன். அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின் மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன். அழாத நாட்கள் என்று ஒன்றமே என்னை கடந்ததாக இல்லை... அழுகையை விட ஒரு நண்பன் இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை... அழுவதற்கென்று குளியல் அறையினையே நான் அதிகம் பயன்படுத்துகின்றேன். யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும் எனக்கு பயமில்லை... எனது அழுகையினை எனது குளியல் ஒருபோதும் காட்டியே க...

ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது ஸ்கோர் விபரம்: இந்தியா: 224/8  50 ஓவரகள் விராத் கோஹ்லி: 67 கேதார் ஜாதவ்: 52 கே.எல்.ராகுல்: 30 விஜய் சங்கர்: 29 தோனி: 28 ஆப்கானிஸ்தான்: 213/10  49.5 ஓவர்கள் முகமது நபி: 52 ரஹ்மத் ஷா: 36 குல்பதின் நப்: 27 ஜாட்ரான்: 21 ஆட்டநாயகன்: பும்ரா இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 291/8  50 ஓவர்கள்

ஏழ்மை கல்விக்கு தடையல்ல - வாழ்வினில் கல்வியினூடாக பல சாதனைகள் செய்திட வாழ்த்துக்கள் சகோதரி!!!

கடந்த வருடம் க.பொ.த சாதரன தர பரீட்சையில் 6 பாடங்களில் அதி உயர் சித்திகளை (6ஏ) பெற்ற #தாண்டியடி விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தமது குடும்ப சூழல் காரணமாக உயர் தர வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கல்வியில் திறமையும் ஆர்வமும் உடைய இம்மாணவிக்கு உதவும் முகமாக பொத்துவில் ஊறணியை சேரந்த சேவியர்_குரேரா பிறின்டன்_குரேரா அவர்கள் ரூ 25,000/- ஐ நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார் (இவர் ஏற்கனவே மர நடுகைக்காக ரூ 5,000/- நன்கொடை வழங்கியிருந்தார் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது)  வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏 இவருடைய நன்கொடையில் இந்துசமயம்,அரசியல்,தமிழ் ஆகிய பாடங்களுக்கான அடுத்து வரும் 2-3 மாதங்களுக்கான வகுப்பு கட்டணங்களும், நிரந்தர வாழ்வாதார உதவியாக ஒரு கோழிக்கூடு மற்றும் நாட்டுக்கோழிகளும் (10 பேடு, 2 சேவல்) வழங்கப்பட்டன.  இம்மாணவியின் கல்வி அடைவுமட்டங்களை பாடசாலை அதிபர் அவர்களால் நேரடி கண்கானிப்பில் அவதானிக்கபடும் என அதிபர் அவர்களே அக்கறை கொண்டு கூறியது கூடுதல் மகிழ்ச்சி. 👍🏻👌 நன்கொடையாளருக்கும் இதனை சரியாக...