16-ஜூன்-2019
சூரியோதயம் : 5:57 am சந்திரௌதயம் : 05:57 PM
சூரியாஸ்தமனம் : 6:43 pm
சந்திராஸ்தமனம் : 05:42 AM
சூரியன்ராசி : மிதுனம்
சந்திரன்ராசி : விருச்சிகம்
மாதம் : ஆனி 1
பக்ஷம் : சுக்ல பக்ஷம்
பஞ்சாங்கம்
1⃣,வாரம் : ஞாயிறு
2⃣,திதி : சதுர்தசி இறுதி 02:02 pm பௌர்ணமி
3⃣,நட்சத்திரம் : அனுஷம் இறுதி 10:07 am ஆனி
4⃣,யோகம் : சாத்தீயம் இறுதி 08:24 pm சுபம்
5⃣,கரணம் :வனசை 02:02 pm
பத்திரை 01:57 am
🌷நல்ல நேரம்🌷
அபிஜித் : 11:54 am – 12:45 pm
அமிர்த காலம் : None
ஆனந்ததி யோகம் : 10:07 am Kaan
🌑கெட்ட நேரம்🌑
ராகுகாலம் : 4:14 PM – 5:31 PM
யம கண்டம் : 12:24 PM – 1:41 PM
தியாஜ்யம் : 15:51 pm – 17:29 pm
குளிகன் : 2:57 PM – 4:14 PM
துர்முஹுர்த்தம் : 1. 04:09 PM – 04:50 PM
🍁இன்றைய ராசிப்பலன்🍁
🌸aries-மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
🌸taurus-ரிஷபம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
🌸gemini-மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பெரியவர்களுடன் நட்பு ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
🌸cancer-கடகம்
இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.
🌸leo-சிம்மம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வருமானம் இரட்டிப்பாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
🌸virgo-கன்னி
இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும்.
🌸libra-துலாம்
இன்று பிள்ளைகளிடம் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
🌸scorpio-விருச்சிகம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும்.
🌸sagittarius-தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். நெருங்கியவர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகளால் பண தேவைகள் பூர்த்தியாகும்.
🌸capricorn-மகரம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்கள் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும்.
🌸aquarius-கும்பம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் கலைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும்.
🌸pisces-மீனம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.

Comments
Post a Comment