Skip to main content

றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக RPL போட்டியில் டா டேவேல் அணியினர் வெற்றி

Niloch.K


தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்கள், விளையாட்டு வீரர்களுக்கு இடையே ஒற்றுமையையும் மற்றும் பலத்தினையும் ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும்   அணிக்கு பதினொருவர்(11) கொண்ட, எட்டு (8) அணிகளுக்கான றேஞ்சர்ஸ் பிரிமியர் லீக் சுற்று போட்டியின் [RPL கிரிக்கெட் சுற்றுப் போட்டி RPL-2019 (SEASON-IX)] 9வது போட்டி நிகழ்வானது கடந்த 19.04.2018 வெள்ளிக்கிழமை  அன்று தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் ஆரம்பமானது.


இதில் நைட் ரைடர்ஸ், கிங் இலவன்,கிங் கோப்ரா, ரோயல் செலன்சஸ், டா டேவேல்,  சன் ரைசஸ், டெகான் சார்ஜர்ஸ், சூப்பர் கிங்க்ஸ் ஆகிய அணிகள் பங்கு பற்றின.

இவ்வாறாக ஆறு நாட்கள் போட்டிகள் நடைபெற்றது.  இறுதி போட்டி நிகழ்வு  12.05.2018 ஞாயிற்றுக்கிழமை நேற்றையதினம் இடம்பெற்றது . இவ் இறுதி போட்டியில் டெகான் சார்ஜர்ஸ் அணியும் மற்றும் டா டேவேல்  அணியும் மோதின, இப்போட்டியில் டா டேவேல் அணியினர் வெற்றிவாகை சூடினர். இதற்காக வெற்றி கிண்ணங்களை அதிதிகள் இணைத்து வழங்கி வைத்தனர்.


இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், அதிதிகளாக பொறியியலாளர் திரு வை.யுவேந்திரா, சிரேஷ்ட கிராம அலுவலர் திரு கண. இராசரெத்தினம்,  றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு பி.அழகுதுரை,  பிரதேச செயலக  அபிவிருத்தி  உத்தியோகத்தர் திரு கே.கணேஸ்,  தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் ஆசிரியர் திரு.வ.ஜெயானந்தமூர்த்தி மற்றும் கே.எம்.ஆர் மொடோஸ் திருக்கோவில் உரிமையாளர் திரு ஆர் கிரிதரன் ஆகியோர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு 1ம் இடத்திற்கு 80,000/=, 2ம் இடத்திற்கு 60,000/= ,3ம் இடத்திற்கு 40,000/=, 4ம் இடத்திற்கு 30,000/=  பணப்பரிசில்களும், கேடயங்கள் மற்றும் பாதகங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இவ் விளையாட்டு போட்டிக்கு ஊடக பங்களிப்பினை battinews.com வழங்கிஇருந்தது















Comments

Popular posts from this blog

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது. பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது. சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும் உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன். என் அழுகைக்கான காரணத்தை அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை... இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான் எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ எனக்கே தெரியாது. அழுகையின் தொடக்கமும் முடிவும் அழுகையாகவே மட்டும் இருக்கிறது. கிடைக்கும் தனிமைகளை எல்லாம் அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன். அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின் மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன். அழாத நாட்கள் என்று ஒன்றமே என்னை கடந்ததாக இல்லை... அழுகையை விட ஒரு நண்பன் இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை... அழுவதற்கென்று குளியல் அறையினையே நான் அதிகம் பயன்படுத்துகின்றேன். யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும் எனக்கு பயமில்லை... எனது அழுகையினை எனது குளியல் ஒருபோதும் காட்டியே க...

ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது ஸ்கோர் விபரம்: இந்தியா: 224/8  50 ஓவரகள் விராத் கோஹ்லி: 67 கேதார் ஜாதவ்: 52 கே.எல்.ராகுல்: 30 விஜய் சங்கர்: 29 தோனி: 28 ஆப்கானிஸ்தான்: 213/10  49.5 ஓவர்கள் முகமது நபி: 52 ரஹ்மத் ஷா: 36 குல்பதின் நப்: 27 ஜாட்ரான்: 21 ஆட்டநாயகன்: பும்ரா இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 291/8  50 ஓவர்கள்

ஏழ்மை கல்விக்கு தடையல்ல - வாழ்வினில் கல்வியினூடாக பல சாதனைகள் செய்திட வாழ்த்துக்கள் சகோதரி!!!

கடந்த வருடம் க.பொ.த சாதரன தர பரீட்சையில் 6 பாடங்களில் அதி உயர் சித்திகளை (6ஏ) பெற்ற #தாண்டியடி விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தமது குடும்ப சூழல் காரணமாக உயர் தர வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கல்வியில் திறமையும் ஆர்வமும் உடைய இம்மாணவிக்கு உதவும் முகமாக பொத்துவில் ஊறணியை சேரந்த சேவியர்_குரேரா பிறின்டன்_குரேரா அவர்கள் ரூ 25,000/- ஐ நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார் (இவர் ஏற்கனவே மர நடுகைக்காக ரூ 5,000/- நன்கொடை வழங்கியிருந்தார் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது)  வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏 இவருடைய நன்கொடையில் இந்துசமயம்,அரசியல்,தமிழ் ஆகிய பாடங்களுக்கான அடுத்து வரும் 2-3 மாதங்களுக்கான வகுப்பு கட்டணங்களும், நிரந்தர வாழ்வாதார உதவியாக ஒரு கோழிக்கூடு மற்றும் நாட்டுக்கோழிகளும் (10 பேடு, 2 சேவல்) வழங்கப்பட்டன.  இம்மாணவியின் கல்வி அடைவுமட்டங்களை பாடசாலை அதிபர் அவர்களால் நேரடி கண்கானிப்பில் அவதானிக்கபடும் என அதிபர் அவர்களே அக்கறை கொண்டு கூறியது கூடுதல் மகிழ்ச்சி. 👍🏻👌 நன்கொடையாளருக்கும் இதனை சரியாக...