நாட்டின்பெரும்பாலானபிரதேசங்களில்,குறிப்பாகதென்மேற்குப்பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்தசில நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய,மற்றும்வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவாஇவடமத்திய மற்றும் கிழக்குமாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டைமாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், சப்ரகமுவ,மத்திய மற்றும் ஊவாமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீஅளவான ஓரளவுபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்று சளிமணடலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. நாட்டைச்சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலைமுன்னறிவிப்பு
புத்தளத்திலிருந்துகொழும்பு ,காலிமற்றும்மட்டக்களப்புஊடாகதிருகோணமலைவரையானகடற்பரப்புகளில்பலஇடங்களில்மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில்காற்றானதுதென்மேற்குதிசையிலிருந்து வீசக்கூடுவதுடன்காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறைவரையான கடற்பரப்புகளிலும்மற்றும்ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்வரையான ஆழம்கூடிய மற்றும் ஆழம்குறைந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Comments
Post a Comment