Skip to main content

அம்பாறை தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளராக சதாசிவம் தியாகராசா நியமனம்


அம்பாறை காடி தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளராக மட்டக்களப்பு – களுதாவளையினைச் சேர்ந்த சதாசிவம். தியாகராசா பொதுச் சேவை ஆணைக் குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று. முகாமைத்துவ பட்டத்தினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும், கல்வியில் பட்ட மேற்படிப்பினை திறந்த பல்கலைக்கழகத்திலும், முகாமைத்துவத்தில் பட்ட மேற்படிப்பினையும், முகாமைத்துவத்தில் முதுமானியினை (MBA) ரஜரட்ட பல்கலைக் கழகத்திலும் பெற்றார்.

1994ஆம் ஆண்டு முதல் 2011 வரை மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றி, அதே நேரம், 1994- 1998  வரை இலங்கை உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் ஆறு வருட காலம் கல்வி இணைப்பாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மாணவர்கள் உயர் தொழில்நுட்ப கணக்கியல் டிப்ளோமா, தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDA. NDE) கல்வி பயின்று தொழில் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்கள்.

2010 – 2011 வரை சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் இரண்டு வருடகாலம் கடமையாற்றினார்.
மீண்டும், மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூhயில் இணைந்த பின்னர் 2011 டிசம்பர் 15 முதல் உப அதிபராக  தொழில்நுட்ப பயிற்சி திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டார். இவரின் வருகைக்குப் பின்னர் பத்துக்கும் மேற்பட்ட புதிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் இருபதுக்கும் மேற்பட்ட கற்கைநெறிகள் (Accreditation)   மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டது. ஒரு நிறுவனத்தில் ஒரு வருடத்தில்; பதினைந்துக்கும் மேற்பட்ட கற்கைநெறிகள் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட சாதனையாகவும் இது உள்ளது.

மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கற்கை நெறிகளுக்கு 500க்கும் மேற்பட்ட தொழில் தகைமைச் சான்றிதழ்கள் இங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவர்  மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரிக்கு உப அதிபராக இருந்த காலப்பகுதியில் பல்வேறு கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தர முகாமைத்துவ பிரதிநிதியாக இருந்து இக் கல்லூரிக்கு தர முகாமைத்துவ சான்றிதழை பெற்றுக் கொடுத்துள்ளார். வடகிழக்கில் முதன் முதலாகக்; இக் கல்லூரியே   தர முகாமைத்துவ சான்றிதளைப் பெற்றது. வடகிழக்கில் இக் கல்லூரி மாத்திரமே முதலில் அமைச்சின் திறன் அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்;டது. இத்திட்டத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வியாபார திட்டம் என்பதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

இதில் 69 புள்ளிகளைப் பெற்று தொழில் நுட்ப பயிற்சி திணைக்களத்தில் முதலிடத்தினைப் பெற்றது. இதனால்   இக் கல்லூரி இரண்டாம் தடவையும் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு 23 மில்லியன் ரூபா நிதி புனரமைப்புக்கு வழங்கப்பட்டது. இவ்வாறான சிறந்த சேவைக்காக அமைச்சு இவருக்கு இரண்டு வாரகால பயிற்சிக்காக சிங்கப்பூர் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

தர முகாமைத்துவத்தில் சிறப்புத் தன்மை காரணமாக இவர் தர தூதுவராக (Quality Ambassador)  அமைச்சினால் நியமிக்கப்பட்டார். திணைக்களத்தில் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒரு தமிழர் இவர் மாத்திரம்தான். இவ்வாறு மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரிக்கு உப அதிபராக  இருந்து பாரிய அபிவிருத்தியினை மேற்கொண்ட இவர் அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரிக்கு  பிரதி அதிபராக பொதுச் சேவை ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டு, புதிய அதிபராக திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டார்
2018 பெப்ப்ரவரி 15ஆம் திகதி அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்பட்ட பின்னர் ஆறு புதிய தொழில் நுட்ப கற்கைநெறிகளும், இரண்டு டிப்ளோமா கற்கை நெறிகளும் ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு முதன் முதலாக 1000க்கும் மேற்பட்ட தொழில் தகைமைச் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது சிறப்பாக குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.
தொழில்நுட்ப பயிற்சித் திணைக்களத்தினால் விண்ணப்பம் கோரப்பட்டு பொதுச் சேவை ஆணைக்குழுவினால் 2019 மே 24ம் திகதிமுதல்  புதிய பணிப்பாளராக  அம்பாறை காடி தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் களுதாவளையைச் சேர்ந்த  சதாசிவம் வள்;ளியம்மையின் கனிஸ்ர புத்திரனுமாவார்.

Comments

Popular posts from this blog

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது. பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது. சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும் உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன். என் அழுகைக்கான காரணத்தை அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை... இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான் எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ எனக்கே தெரியாது. அழுகையின் தொடக்கமும் முடிவும் அழுகையாகவே மட்டும் இருக்கிறது. கிடைக்கும் தனிமைகளை எல்லாம் அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன். அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின் மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன். அழாத நாட்கள் என்று ஒன்றமே என்னை கடந்ததாக இல்லை... அழுகையை விட ஒரு நண்பன் இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை... அழுவதற்கென்று குளியல் அறையினையே நான் அதிகம் பயன்படுத்துகின்றேன். யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும் எனக்கு பயமில்லை... எனது அழுகையினை எனது குளியல் ஒருபோதும் காட்டியே க...

ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது ஸ்கோர் விபரம்: இந்தியா: 224/8  50 ஓவரகள் விராத் கோஹ்லி: 67 கேதார் ஜாதவ்: 52 கே.எல்.ராகுல்: 30 விஜய் சங்கர்: 29 தோனி: 28 ஆப்கானிஸ்தான்: 213/10  49.5 ஓவர்கள் முகமது நபி: 52 ரஹ்மத் ஷா: 36 குல்பதின் நப்: 27 ஜாட்ரான்: 21 ஆட்டநாயகன்: பும்ரா இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 291/8  50 ஓவர்கள்

ஏழ்மை கல்விக்கு தடையல்ல - வாழ்வினில் கல்வியினூடாக பல சாதனைகள் செய்திட வாழ்த்துக்கள் சகோதரி!!!

கடந்த வருடம் க.பொ.த சாதரன தர பரீட்சையில் 6 பாடங்களில் அதி உயர் சித்திகளை (6ஏ) பெற்ற #தாண்டியடி விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தமது குடும்ப சூழல் காரணமாக உயர் தர வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கல்வியில் திறமையும் ஆர்வமும் உடைய இம்மாணவிக்கு உதவும் முகமாக பொத்துவில் ஊறணியை சேரந்த சேவியர்_குரேரா பிறின்டன்_குரேரா அவர்கள் ரூ 25,000/- ஐ நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார் (இவர் ஏற்கனவே மர நடுகைக்காக ரூ 5,000/- நன்கொடை வழங்கியிருந்தார் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது)  வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏 இவருடைய நன்கொடையில் இந்துசமயம்,அரசியல்,தமிழ் ஆகிய பாடங்களுக்கான அடுத்து வரும் 2-3 மாதங்களுக்கான வகுப்பு கட்டணங்களும், நிரந்தர வாழ்வாதார உதவியாக ஒரு கோழிக்கூடு மற்றும் நாட்டுக்கோழிகளும் (10 பேடு, 2 சேவல்) வழங்கப்பட்டன.  இம்மாணவியின் கல்வி அடைவுமட்டங்களை பாடசாலை அதிபர் அவர்களால் நேரடி கண்கானிப்பில் அவதானிக்கபடும் என அதிபர் அவர்களே அக்கறை கொண்டு கூறியது கூடுதல் மகிழ்ச்சி. 👍🏻👌 நன்கொடையாளருக்கும் இதனை சரியாக...