Skip to main content

உலகக் கிண்ணத் திருவிழா இன்று ஆரம்பம்!!


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, 2019ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (30) இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

10 அணிகள் பங்குபற்றும் 2019ஆம் ஆண்டு உலக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடர் ஜூலை 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசை அடிப்படையில் இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. மேலும், மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி சுற்றுமூலம் இந்தத் தொடரில் நுழைந்துள்ளன.

இத்தொடரின் அரையிறுதிப் போட்டி ஜுலை 9ஆம் திகதியும் 2ஆவது அரையிறுதிப் போட்டி ஜுலை 11ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. அத்தோடு இறுதிப் போட்டி ஜுலை 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வுகள் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதல் போட்டியில், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும் – டு பிளிசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்கா அணிகளும் மோதிக்கொள்ளவுள்ளன.

இந்த இரண்டு அணிகளும் சம பலம் பொருந்தியவை என்பதால் உலகக்கிண்ண முதல் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தமுறை உலகக் கிண்ணத்தின் மொத்த பரிசுத் தொகை 10 மில்லியன்களாகும்.

இதில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் வழங்கப்படவுள்ளது (இலங்கை ரூபாவில் 70 கோடி). உலகக் கிண்ண வரலாற்றில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படுகின்ற மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் வழங்கப்படவுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலிய அணிக்கு 3.75 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. அதன்படி, இம்முறை பரிசுத் தொகை 250,000 அமெரிக்கா டொலர்கள் அதிகமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அரையிறுதியில் தோல்வியடையும் இரண்டு அணிகளுக்கும் தலா 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன.

இதேநேரம், லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் 40,000 அமெரிக்க டொலர்களும், எந்தவொரு போட்டியிலும் வெற்றிபெறாது வெளியேறும் அணிக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளது.

கிரிக்கெட் உலகில் 5 முன்னணி வீரர்காளான இந்திய அணியின் தோனி, மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கிறிஸ்கெய்ல், நியூஸிலாந்து அணியின் ரோஷ் டெய்லர், தென்னாபிரிக்க அணியின் ஸ்டெய்ன், ஹசிம் அம்லா மற்றும் இலங்கை அணியின் லசித் மாலிங்க ஆகியோர் இறுதியாக விளையாடும் உலகக் கிண்ணத் தொடர் இதுவாகும்.

1975ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உலகக் கிண்ணத் தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும் மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா அணிகள் தலா 2 முறையும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா – 1987, 1999, 2003, 2007, 2015

மேற்கிந்தியத்தீவுகள் அணி – 1975, 1979

இந்திய அணி – 1983, 2011

இலங்கை – 1996

முழு போட்டி அட்டவணை:

Comments

Popular posts from this blog

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது. பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது. சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும் உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன். என் அழுகைக்கான காரணத்தை அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை... இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான் எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ எனக்கே தெரியாது. அழுகையின் தொடக்கமும் முடிவும் அழுகையாகவே மட்டும் இருக்கிறது. கிடைக்கும் தனிமைகளை எல்லாம் அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன். அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின் மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன். அழாத நாட்கள் என்று ஒன்றமே என்னை கடந்ததாக இல்லை... அழுகையை விட ஒரு நண்பன் இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை... அழுவதற்கென்று குளியல் அறையினையே நான் அதிகம் பயன்படுத்துகின்றேன். யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும் எனக்கு பயமில்லை... எனது அழுகையினை எனது குளியல் ஒருபோதும் காட்டியே க...

ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது ஸ்கோர் விபரம்: இந்தியா: 224/8  50 ஓவரகள் விராத் கோஹ்லி: 67 கேதார் ஜாதவ்: 52 கே.எல்.ராகுல்: 30 விஜய் சங்கர்: 29 தோனி: 28 ஆப்கானிஸ்தான்: 213/10  49.5 ஓவர்கள் முகமது நபி: 52 ரஹ்மத் ஷா: 36 குல்பதின் நப்: 27 ஜாட்ரான்: 21 ஆட்டநாயகன்: பும்ரா இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 291/8  50 ஓவர்கள்

ஏழ்மை கல்விக்கு தடையல்ல - வாழ்வினில் கல்வியினூடாக பல சாதனைகள் செய்திட வாழ்த்துக்கள் சகோதரி!!!

கடந்த வருடம் க.பொ.த சாதரன தர பரீட்சையில் 6 பாடங்களில் அதி உயர் சித்திகளை (6ஏ) பெற்ற #தாண்டியடி விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தமது குடும்ப சூழல் காரணமாக உயர் தர வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கல்வியில் திறமையும் ஆர்வமும் உடைய இம்மாணவிக்கு உதவும் முகமாக பொத்துவில் ஊறணியை சேரந்த சேவியர்_குரேரா பிறின்டன்_குரேரா அவர்கள் ரூ 25,000/- ஐ நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார் (இவர் ஏற்கனவே மர நடுகைக்காக ரூ 5,000/- நன்கொடை வழங்கியிருந்தார் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது)  வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏 இவருடைய நன்கொடையில் இந்துசமயம்,அரசியல்,தமிழ் ஆகிய பாடங்களுக்கான அடுத்து வரும் 2-3 மாதங்களுக்கான வகுப்பு கட்டணங்களும், நிரந்தர வாழ்வாதார உதவியாக ஒரு கோழிக்கூடு மற்றும் நாட்டுக்கோழிகளும் (10 பேடு, 2 சேவல்) வழங்கப்பட்டன.  இம்மாணவியின் கல்வி அடைவுமட்டங்களை பாடசாலை அதிபர் அவர்களால் நேரடி கண்கானிப்பில் அவதானிக்கபடும் என அதிபர் அவர்களே அக்கறை கொண்டு கூறியது கூடுதல் மகிழ்ச்சி. 👍🏻👌 நன்கொடையாளருக்கும் இதனை சரியாக...