நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் பூர்த்தி செய்ய முடியாமல் போன பாடங்களை நிவர்த்தி செய்வற்காக பாடசாலை மட்டத்தில் பொருத்தமான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு, பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.
மேலும் தவணைப்பரீட்சையை எந்த நிலைமையிலும் ரத்துச் செய்ய வேண்டாமெனவும் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.ரத்னாயக்க கேட்டுள்ளார்.
பாடவிதானங்களை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை வகுக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச தகவல் திணைக்களம்

Comments
Post a Comment