Skip to main content

பிறந்த திகதியை வைத்து உங்களுக்கு ஏற்ற துணையை கண்டறிவது எப்படித் தெரியுமா?


பிறந்த நாள் வைத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கம் பொதுவாக இருந்து வருகிறது. எப்படி ஜாதகத்திற்கு என்று தனி பொருத்தம் மற்றும் பலன்கள் இருக்கிறதோ, அவ்வாறே பிறந்த தேதியை வைத்து பார்ப்பதற்கும் பொது பலன்கள் மற்றும் பொருத்தங்கள் இருக்கின்றன.இந்த தேதியில் பிறந்தவர் எந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் அவரது வாழ்க்கை சந்தோசமாக இருக்கும், இருக்காது என்ற பலன் இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காண்போம்.1,10,19,28 ம் தேதியில் பிறந்தவர்கள் -1,10,19,28 ம் தேதியில் பிறந்தவர்கள் 3, 4, 5, 6, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். இவர்கள், 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரணம் 1ஆம் எண் சூரியன், சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகள், குடும்ப அன்யோன்யம் குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. 1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்தால் வாழ்க்கை செழிக்கும்.

2,11,20,29 ம் தேதியில் பிறந்தவர்கள்- 2,11,20,29 ம் தேதியில் பிறந்தவர்களுக்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். இருப்பினும் 7ந் தேதி பிறந்த பெண் மிகவும் சிறந்தவள் என்ற கருது நிலவுகிறது. 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பிறகு வாழ்வே நரகமாகிவிடும். 1ம் எண் பிறந்த பெண்,இவர்களை அடக்கி ஆளும் திறன் கொண்டிருப்பார்கள். நல்ல வழித் துணையாகவும் அமைவாள். 2,11,20,29 ம் தேதியில் பிறந்தவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 தேதிகளும், மற்றும் 1, 6, 7 என்ற கூட்டு எண்ணாக வரும் நாட்களிலும் திருமணம் செய்துக் கொள்ளலாம்.

3,12,21,30 ம் தேதியில் பிறந்தவர்கள்- 3,12,21,30 ம் தேதியில் பிறந்தவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும். 2ஆம் எண்ணில் பிறந்தவர்களையும் திருமணம் செய்துக் கொள்ளலாம், இவர்கள் உங்களை அனுசரித்துப் போவார்கள்.

4,13,22,31 ம் தேதியில் பிறந்தவர்கள்- 4,13,22,31 ம் தேதியில் பிறந்தவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை திருமணம் கொண்டால் திருமண வாழ்க்கை நல்லப்படியாக அமையும். மற்றும் 5, 6 எண்களில் பிறந்த பெண்களும், இவர்களுக்கு நன்மையே செய்வார்கள். மேலும் 4ம் தேதியில் பிறந்த ஆண்கள், 6ஆம் தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும். இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1, 6 எண்ணாக வரும் தேதிகளில் செய்துக் கொண்டால் திருமண வாழ்க்கை இன்பமையமாக அமையும்.

5,14,23 ம் தேதியில் பிறந்தவர்கள்-5,14,23 ம் தேதியில் பிறந்தவர்கக்கு காதல் மீது அதிக மோகம் இருக்கும். தைரியமாக காதலில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் காதலால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். இவர்கள் 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும், கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவு எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.



6,15,24 ம் தேதியில் பிறந்தவர்கள்-6,15,24 ம் தேதியில் பிறந்தவர்கள் 6, 9 எண்களில் பிறந்த பெண்களை திருமணம் செய்துக் கொள்வதால் நல்ல வாழ்க்கை அமையும். 1, 3, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தவர்களை தவிர்த்துவிடுவது நல்லது. மற்றும் திருமண நாளை 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகள் அல்லது 1, 6, 9 போன்ற கூட்டு எண் வரும் நாட்களில் செய்துக் கொண்டால் நல்ல நன்மை பெறலாம்.

7,16,25 ம் தேதியில் பிறந்தவர்கள்- 7,16,25 ம் தேதியில் பிறந்தவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். 8ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும். திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது. 9ம் எண் நடுத்தரமானதுதான்.

8,17,26 ம் தேதியில் பிறந்தவர்கள்-8,17,26 ம் தேதியில் பிறந்தவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை திருமணம்செய்துக் கொள்ளலாம். 2, 7 மற்றும் 8ஆம் என்னில் பிறந்த பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது. 9ஆம் தேதியில் பிறந்த பெண்கள் இவர்களை அடக்கி ஆள முயல்வார்கள். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் இல்வாழ்க்கை செழிக்கும்.

9,18,27 ம் தேதியில் பிறந்தவர்கள்-9,18,27 ம் தேதியில் பிறந்தவர்கள் தாம்பத்தியத்தில் மிகுந்த நாட்டமும், முனைப்பும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால், இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் பாக்கியம் அதிகம். 2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 ஆக வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது. மீறி செய்தால் திருமண வாழ்க்கை துயரமாக அமைய வாய்ப்புகள் உண்டு. 3, 6, 9, 1 ஆகிய நாட்களில் திருமணம் செய்துக் கொண்டால், இல்லறம் நல்லறமாக அமையும்.

Comments

Popular posts from this blog

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது. பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது. சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும் உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன். என் அழுகைக்கான காரணத்தை அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை... இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான் எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ எனக்கே தெரியாது. அழுகையின் தொடக்கமும் முடிவும் அழுகையாகவே மட்டும் இருக்கிறது. கிடைக்கும் தனிமைகளை எல்லாம் அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன். அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின் மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன். அழாத நாட்கள் என்று ஒன்றமே என்னை கடந்ததாக இல்லை... அழுகையை விட ஒரு நண்பன் இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை... அழுவதற்கென்று குளியல் அறையினையே நான் அதிகம் பயன்படுத்துகின்றேன். யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும் எனக்கு பயமில்லை... எனது அழுகையினை எனது குளியல் ஒருபோதும் காட்டியே க...

ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது ஸ்கோர் விபரம்: இந்தியா: 224/8  50 ஓவரகள் விராத் கோஹ்லி: 67 கேதார் ஜாதவ்: 52 கே.எல்.ராகுல்: 30 விஜய் சங்கர்: 29 தோனி: 28 ஆப்கானிஸ்தான்: 213/10  49.5 ஓவர்கள் முகமது நபி: 52 ரஹ்மத் ஷா: 36 குல்பதின் நப்: 27 ஜாட்ரான்: 21 ஆட்டநாயகன்: பும்ரா இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 291/8  50 ஓவர்கள்

ஏழ்மை கல்விக்கு தடையல்ல - வாழ்வினில் கல்வியினூடாக பல சாதனைகள் செய்திட வாழ்த்துக்கள் சகோதரி!!!

கடந்த வருடம் க.பொ.த சாதரன தர பரீட்சையில் 6 பாடங்களில் அதி உயர் சித்திகளை (6ஏ) பெற்ற #தாண்டியடி விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தமது குடும்ப சூழல் காரணமாக உயர் தர வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கல்வியில் திறமையும் ஆர்வமும் உடைய இம்மாணவிக்கு உதவும் முகமாக பொத்துவில் ஊறணியை சேரந்த சேவியர்_குரேரா பிறின்டன்_குரேரா அவர்கள் ரூ 25,000/- ஐ நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார் (இவர் ஏற்கனவே மர நடுகைக்காக ரூ 5,000/- நன்கொடை வழங்கியிருந்தார் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது)  வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏 இவருடைய நன்கொடையில் இந்துசமயம்,அரசியல்,தமிழ் ஆகிய பாடங்களுக்கான அடுத்து வரும் 2-3 மாதங்களுக்கான வகுப்பு கட்டணங்களும், நிரந்தர வாழ்வாதார உதவியாக ஒரு கோழிக்கூடு மற்றும் நாட்டுக்கோழிகளும் (10 பேடு, 2 சேவல்) வழங்கப்பட்டன.  இம்மாணவியின் கல்வி அடைவுமட்டங்களை பாடசாலை அதிபர் அவர்களால் நேரடி கண்கானிப்பில் அவதானிக்கபடும் என அதிபர் அவர்களே அக்கறை கொண்டு கூறியது கூடுதல் மகிழ்ச்சி. 👍🏻👌 நன்கொடையாளருக்கும் இதனை சரியாக...