Skip to main content

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை நெறிமுறைகள்!


மனித மனம் ஆழ்கடல் போன்றது. இதில் அமைதி என்பது சில நாட்கள் நீடித்தாலும், கரையை தொட்டுச் செல்லும் அலைபோல் சில பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன.

இன்பம் எனும் சொர்க்க வாசலில் பயணிப்பவர்கள் குழந்தைகள் மட்டுமே என்றால் அது மிகையாகாது. ஏனெனில் இந்த வாழ்க்கை ஆழ்கடல் பயணமல்லவா? அதில் துன்பமும், இன்பமும் மாறிமாறி வந்தால்தான் பயணம் இனிமையாக அமையும். வாழ்க்கையும் பூர்த்தியாகிறது.

இந்த வாழ்க்கை பற்றி வேதங்களும் புராணங்களும் பல விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தாலும், அதன் உண்மைத்தன்மையை பகவத்கீதையைவிட வேறொன்று சிறப்பாக கூறிவிடமுடியாது என்பதே எண்ணப்பாடு. வாழ்க்கை பற்றி பகவத் கீதை கூறும்போது, வாழ்க்கை என்பது சூரியன் அல்ல என்றும் அது நிலா போன்றது என்றும் அதில் வளர்பிறை தேய்பிறை என அனைத்தும் இருக்கும் என்றும், ஒருநாள் அது மறைந்தே போகும் என்றும் கூறியுள்ளது. மனிதன் இவ்வுலகில் பிறந்தது முதல் அவன் இறக்கும்வரை அனுபவிக்கும் அத்தனை விடயங்களையும் தெளிவுபடுத்துகிறது.அவ்வாறே மனித மனம் இலகுவில் அன்புக்கு அடிமையாவதும் அது பொய்யென அறியும்போது துவண்டுவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. உங்கள் அன்பு எங்கு நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை.நிராகரித்தவருக்கே இழப்பு. உலகில் தன்னைப் போலவே பிறரையும் நேசிக்க தெரிந்தவர் இருப்பார் என்றால் அவர் கடவுள் மட்டுமே. எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று நினைக்கும்போது “ஒன்றை மறவாதீர்கள் எதிர்காலம் ஒன்று உள்ளது” என கூறுவதன் மூலம் வாழ்க்கையின் அர்த்தம் புலப்படுகிறது.வெற்றி இல்லாத வாழ்க்கை இல்லை. ஆனால் வெற்றி மட்டுமே வாழ்க்கை அல்ல. ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை என வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை பகவத் கீதை அழகாக சித்தரிக்கின்றது.இவ்வாறே உன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அடுத்தவர் மீது கோபம் கொள்ளாதே, மகான் போல் வாழவேண்டும் என்று அவசியமில்லை. மனசாட்சிபோல் வாழ்ந்து காட்டுங்கள். நம்மைப்பற்றி யார் என்ன நினைத்தால் நமக்கென்ன… நம்மை பற்றி நாம் அறியாததையா மற்றவர்கள் அறிந்துவிடப்போகிறார்கள் என்பதன் மூலம் வாழ்க்கையை சீர்படுத்தும் வழிமுறைகளை குறிப்பிடுகின்றது.

Comments

Popular posts from this blog

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது. பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது. சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும் உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன். என் அழுகைக்கான காரணத்தை அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை... இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான் எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ எனக்கே தெரியாது. அழுகையின் தொடக்கமும் முடிவும் அழுகையாகவே மட்டும் இருக்கிறது. கிடைக்கும் தனிமைகளை எல்லாம் அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன். அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின் மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன். அழாத நாட்கள் என்று ஒன்றமே என்னை கடந்ததாக இல்லை... அழுகையை விட ஒரு நண்பன் இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை... அழுவதற்கென்று குளியல் அறையினையே நான் அதிகம் பயன்படுத்துகின்றேன். யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும் எனக்கு பயமில்லை... எனது அழுகையினை எனது குளியல் ஒருபோதும் காட்டியே க...

ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது ஸ்கோர் விபரம்: இந்தியா: 224/8  50 ஓவரகள் விராத் கோஹ்லி: 67 கேதார் ஜாதவ்: 52 கே.எல்.ராகுல்: 30 விஜய் சங்கர்: 29 தோனி: 28 ஆப்கானிஸ்தான்: 213/10  49.5 ஓவர்கள் முகமது நபி: 52 ரஹ்மத் ஷா: 36 குல்பதின் நப்: 27 ஜாட்ரான்: 21 ஆட்டநாயகன்: பும்ரா இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 291/8  50 ஓவர்கள்

ஏழ்மை கல்விக்கு தடையல்ல - வாழ்வினில் கல்வியினூடாக பல சாதனைகள் செய்திட வாழ்த்துக்கள் சகோதரி!!!

கடந்த வருடம் க.பொ.த சாதரன தர பரீட்சையில் 6 பாடங்களில் அதி உயர் சித்திகளை (6ஏ) பெற்ற #தாண்டியடி விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தமது குடும்ப சூழல் காரணமாக உயர் தர வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கல்வியில் திறமையும் ஆர்வமும் உடைய இம்மாணவிக்கு உதவும் முகமாக பொத்துவில் ஊறணியை சேரந்த சேவியர்_குரேரா பிறின்டன்_குரேரா அவர்கள் ரூ 25,000/- ஐ நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார் (இவர் ஏற்கனவே மர நடுகைக்காக ரூ 5,000/- நன்கொடை வழங்கியிருந்தார் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது)  வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏 இவருடைய நன்கொடையில் இந்துசமயம்,அரசியல்,தமிழ் ஆகிய பாடங்களுக்கான அடுத்து வரும் 2-3 மாதங்களுக்கான வகுப்பு கட்டணங்களும், நிரந்தர வாழ்வாதார உதவியாக ஒரு கோழிக்கூடு மற்றும் நாட்டுக்கோழிகளும் (10 பேடு, 2 சேவல்) வழங்கப்பட்டன.  இம்மாணவியின் கல்வி அடைவுமட்டங்களை பாடசாலை அதிபர் அவர்களால் நேரடி கண்கானிப்பில் அவதானிக்கபடும் என அதிபர் அவர்களே அக்கறை கொண்டு கூறியது கூடுதல் மகிழ்ச்சி. 👍🏻👌 நன்கொடையாளருக்கும் இதனை சரியாக...