மேலும் 8 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க திட்டமிப்பட்டுள்ளது. செயற்திட்ட உதவியாளர்களாக பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தெரிவுசெய்யப்படும் பட்டதாரிகள் ஒருவருட பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர். அவர்களுக்கு பயிற்சி காலத்தின் போது 20 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படுமென தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment