Skip to main content

ஒரு பாடசாலையும் 3 கிரிக்கெட் வீீரர்களும்.


St. Josephs கல்லூரியில் கிட்டதட்ட ஒரே காலப் பகுதியில் கல்வி கற்றவர்கள் தான் இந்த Angelo Mathews, Dimuth Karunaratne, Thisara Perera. AL batch Mathews 2006, Dimuth 2007 Thisara 2008. மூவரும் பாடசாலைக் காலம் முதலே எத்தனையோ  அணிகளில் சேர்ந்து5 விளையாடியிருக்கின்றார்கள்.
Angelo Mathews பாடசாலைக் காலத்தில் விளையாடும் போதே இலங்கை கிரிக்கெட் தெரிவாளர்கள் வரையில் பிரபலம் பெற்றுவிட்டார். Under 16 இருக்கும் போதே under 19 worldcup விளையாடியவர்.

 ஒரு கட்டத்தில் Angie தலைமை தாங்கிய under 19 அணியின் opener Dimuth. பின் Dimuth தலைமையுடன் opening batting இலும் விளாசித்தள்ள உள்ளூர்க் கழகங்கள் குறி வைக்கின்றன. கழக உறுப்பினர்கள் சிறந்த வீரர்களை பாடசாலைக் காலத்திலேயே தம் கழகங்களில் சேர்த்து விடுவதில் மும்முரமாக இருந்தனர். Dimuth க்கு அப்போதைய number one club SSCயில் வாய்ப்பு கிடைக்க, Mathews ஐயும் Perera வையும் st Joseph இன் இன்னொரு முன்னாள் மாணவர் Chaminda Vaas, Colts club இல் இணைக்கின்றார்.

2008, 2009 களில் முறையே Mathews ம் ஜ Perera வும் இலங்கை அணிக்குள் வந்து கலக்க ஆரம்பிக்க, Dimuth SSC யில் தான் விளையாடிக் கொண்டிருந்தார். Mathews Perera IPL contract அது இதென்று எங்கேயோ போய்விட Dimuth க்கு இருந்தது SSC தான்.  Dilshan, Sanath, Tharanga போன்றோரைத்தாண்டி Team  க்குள் வர முடியவில்லை. 2011 இல் அறிமுகமானாலும், இலங்கை அணியில் நிரந்தர இடம் பிடிக்கும்போது,  Mathews & Perera senior players ஆகிவிட்டிருந்தனர்.

நான் கூட, Dimuth தட்டுத் தடுமாறி அணியில் இருந்த காலத்தில் Mathews captain ஆகவும், Perera senior player ஆகவும் இருக்க வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமானது என எண்ணியிருக்கின்றேன்.

IPL பார்க்கும் போதும், One day cricket பார்க்கும் போதும் Dimuth க்கு வெறுத்துப்போயிருக்கும்.

ஆனால் இப்போது நிலைமை வேறு! Dimuth world cup அணியின் தலைவர். Mathews  Perera  அவருக்கு கீழே.  கடந்த சில நாட்களாக எனக்கு
தலைக்குள், 'வாழ்க்கை ஒரு வட்டம்' , ' முதல்ல யாரு முன்னால வர்றாங்க என்று....' போன்ற வசனங்கள் வந்து போகின்றன

Comments

Popular posts from this blog

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது. பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது. சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும் உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன். என் அழுகைக்கான காரணத்தை அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை... இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான் எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ எனக்கே தெரியாது. அழுகையின் தொடக்கமும் முடிவும் அழுகையாகவே மட்டும் இருக்கிறது. கிடைக்கும் தனிமைகளை எல்லாம் அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன். அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின் மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன். அழாத நாட்கள் என்று ஒன்றமே என்னை கடந்ததாக இல்லை... அழுகையை விட ஒரு நண்பன் இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை... அழுவதற்கென்று குளியல் அறையினையே நான் அதிகம் பயன்படுத்துகின்றேன். யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும் எனக்கு பயமில்லை... எனது அழுகையினை எனது குளியல் ஒருபோதும் காட்டியே க...

ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது ஸ்கோர் விபரம்: இந்தியா: 224/8  50 ஓவரகள் விராத் கோஹ்லி: 67 கேதார் ஜாதவ்: 52 கே.எல்.ராகுல்: 30 விஜய் சங்கர்: 29 தோனி: 28 ஆப்கானிஸ்தான்: 213/10  49.5 ஓவர்கள் முகமது நபி: 52 ரஹ்மத் ஷா: 36 குல்பதின் நப்: 27 ஜாட்ரான்: 21 ஆட்டநாயகன்: பும்ரா இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 291/8  50 ஓவர்கள்

ஏழ்மை கல்விக்கு தடையல்ல - வாழ்வினில் கல்வியினூடாக பல சாதனைகள் செய்திட வாழ்த்துக்கள் சகோதரி!!!

கடந்த வருடம் க.பொ.த சாதரன தர பரீட்சையில் 6 பாடங்களில் அதி உயர் சித்திகளை (6ஏ) பெற்ற #தாண்டியடி விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தமது குடும்ப சூழல் காரணமாக உயர் தர வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கல்வியில் திறமையும் ஆர்வமும் உடைய இம்மாணவிக்கு உதவும் முகமாக பொத்துவில் ஊறணியை சேரந்த சேவியர்_குரேரா பிறின்டன்_குரேரா அவர்கள் ரூ 25,000/- ஐ நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார் (இவர் ஏற்கனவே மர நடுகைக்காக ரூ 5,000/- நன்கொடை வழங்கியிருந்தார் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது)  வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏 இவருடைய நன்கொடையில் இந்துசமயம்,அரசியல்,தமிழ் ஆகிய பாடங்களுக்கான அடுத்து வரும் 2-3 மாதங்களுக்கான வகுப்பு கட்டணங்களும், நிரந்தர வாழ்வாதார உதவியாக ஒரு கோழிக்கூடு மற்றும் நாட்டுக்கோழிகளும் (10 பேடு, 2 சேவல்) வழங்கப்பட்டன.  இம்மாணவியின் கல்வி அடைவுமட்டங்களை பாடசாலை அதிபர் அவர்களால் நேரடி கண்கானிப்பில் அவதானிக்கபடும் என அதிபர் அவர்களே அக்கறை கொண்டு கூறியது கூடுதல் மகிழ்ச்சி. 👍🏻👌 நன்கொடையாளருக்கும் இதனை சரியாக...