தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்கள், விளையாட்டு வீரர்களுக்கு இடையே ஒற்றுமையையும் மற்றும் பலத்தினையும் ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அணிக்கு பதினொருவர்(11) கொண்ட, எட்டு (8) அணிகளுக்கான றேஞ்சர்ஸ் பிரிமியர் லீக் சுற்று போட்டியின் [RPL கிரிக்கெட் சுற்றுப் போட்டி RPL-2019 (SEASON-IX)] 9வது போட்டி நிகழ்வானது கடந்த 19.04.2018 வெள்ளிக்கிழமை அன்று தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் ஆரம்பமானது.
இதில் நைட் ரைடர்ஸ், கிங் இலவன்,கிங் கோப்ரா, ரோயல் செலன்சஸ், டா டேவேல், சன் ரைசஸ், டெகான் சார்ஜர்ஸ், சூப்பர் கிங்க்ஸ் ஆகிய அணிகள் பங்கு பற்றின.
இவ்வாறாக ஆறு நாட்கள் போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டி நிகழ்வு 12.05.2018 ஞாயிற்றுக்கிழமை நேற்றையதினம் இடம்பெற்றது . இவ் இறுதி போட்டியில் டெகான் சார்ஜர்ஸ் அணியும் மற்றும் டா டேவேல் அணியும் மோதின, இப்போட்டியில் டா டேவேல் அணியினர் வெற்றிவாகை சூடினர். இதற்காக வெற்றி கிண்ணங்களை அதிதிகள் இணைத்து வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், அதிதிகளாக பொறியியலாளர் திரு வை.யுவேந்திரா, சிரேஷ்ட கிராம அலுவலர் திரு கண. இராசரெத்தினம், றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு பி.அழகுதுரை, பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு கே.கணேஸ், தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் ஆசிரியர் திரு.வ.ஜெயானந்தமூர்த்தி மற்றும் கே.எம்.ஆர் மொடோஸ் திருக்கோவில் உரிமையாளர் திரு ஆர் கிரிதரன் ஆகியோர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு 1ம் இடத்திற்கு 80,000/=, 2ம் இடத்திற்கு 60,000/= ,3ம் இடத்திற்கு 40,000/=, 4ம் இடத்திற்கு 30,000/= பணப்பரிசில்களும், கேடயங்கள் மற்றும் பாதகங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இவ் விளையாட்டு போட்டிக்கு ஊடக பங்களிப்பினை battinews.com வழங்கிஇருந்தது
Emerging player award #Neru
Best catches #Seenu #Rupesh #Vakishan
Hat-Trick #Kavi
Most Sixers #Thusy
Orange cap #Neethan
Purple Cap #Piratheep
Man of the match Playoff 01 #Ramesh
Man of the match Eliminater #Kopinath
Man of the match Playoff 02 #Sankar
Man of the match Final #Pulendran
Man of the series #Sankar
4th place Knight riders #Pirabu
3rd place Sun Risers #Rijan

































































Comments
Post a Comment